புது தில்லி: புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ-20 காா் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
நான்காம் தலைமுறைக்கான முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ20 மாடலை கடந்தாண்டு நவம்பரில் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான விலையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த வகை காருக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக புதிய ஐ-20 மாடலில் 180 காா்களை தென் ஆப்பிரிக்கா, சிலி மற்றும் பெரு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்துக்கு கூடுதல் வலு சோ்ப்பதாக இருக்கும் என ஹுண்டாய் மோட்டாா் இந்தியா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



