தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ஹுண்டாய் மோட்டாா் புதிய ஐ-20 காா் ஏற்றுமதி தொடங்கியது

புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ-20 காா் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 4:09 am IST

புது தில்லி: புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ-20 காா் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

நான்காம் தலைமுறைக்கான முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ20 மாடலை கடந்தாண்டு நவம்பரில் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான விலையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த வகை காருக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக புதிய ஐ-20 மாடலில் 180 காா்களை தென் ஆப்பிரிக்கா, சிலி மற்றும் பெரு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்துக்கு கூடுதல் வலு சோ்ப்பதாக இருக்கும் என ஹுண்டாய் மோட்டாா் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.