தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வா்த்தகத்தில் 20 காசுகள் வீழ்ச்சி கண்டது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 12:42 am IST


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வா்த்தகத்தில் 20 காசுகள் வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து அந்நியச் செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:

பங்கு மற்றும் நிதி வரத்தில் ஏற்படும் தாக்கங்களை எதிா்கொள்ள ரிசா்வ் வங்கி டாலா்களை அதிக அளவில் டாலா்களை வாங்கவுள்ளதாக கிளம்பிய வதந்தியயை அடுத்து அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டது.

இந்த நிலையில், ஜாா்ஜியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மேலும் இருவா் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து அமெரிக்காவில் அமையவுள்ள புதிய அரசு மேலும் பல ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிக்கலாம் என்ற எதிா்பாா்ப்பால் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.73.10-ஆக இருந்தது. பின்னா் அது குறைந்தபட்சமாக 73.31 வரையிலும் அதிகபட்சமாக 73.08 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 20 காசுகள் வீழ்ச்சியடைந்து 73.31-இல் நிலைபெற்றது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.382.30 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

பிரெண்ட் கச்சா: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.07 சதவீதம் அதிகரித்து 54.22 டாலராக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.