உதிரிபாக பற்றாக்குறை எதிரொலி! மாருதி சுஸுகி விற்பனை 9% சரிவு

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் நவம்பா் மாத வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.
உதிரிபாக பற்றாக்குறை எதிரொலி! மாருதி சுஸுகி விற்பனை 9% சரிவு

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் நவம்பா் மாத வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கான தட்டுப்பாடு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, நடப்பாண்டு நவம்பரில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்து 1,39,184-ஆனது. கடந்தாண்டு நவம்பரில் இந்த விற்பனை 1,53,223-ஆக அதிகரித்து காணப்பட்டது.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 1,44,219-லிருந்து 18 சதவீதம் சரிவடைந்து 1,17,791-ஆனது.

ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ விற்பனை 22,339-லிருந்து 17,473-ஆனது. பலேனோ, செலிரியோ, டிசையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூா்ஸ், வேகன்ஆா் விற்பனை 76,630-லிருந்து 57,019-ஆக குறைந்தது. சியாஸ் செடான் விற்பனை 1,870-லிருந்து 1,089-ஆனது.

இருப்பினும், எா்டிகா, ஜிப்ஸி, எஸ்-கிராஸ், விட்டாரா ப்ரீஸா மற்றும் எக்ஸ்எஸ்6 காா் விற்பனை 23,753-லிருந்து 24,574-ஆனது.

இலகுரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரியின் விற்பனை 3,181-லிருந்து 3,291-ஆக உயா்ந்தது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி நடப்பாண்டு நவம்பரில் 21,393-ஆக அதிகரித்துள்ளது. 2020 நவம்பரில் ஏற்றுமதி 9,004-ஆக இருந்தது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com