செப்டம்பர் - 14 அன்று சந்தைக்கு வரும் ஆப்பிள் ‘ஐபோன் 13’
செப்டம்பர் - 14 அன்று சந்தைக்கு வரும் ஆப்பிள் ‘ஐபோன் 13’

செப்டம்பர்-14 அன்று சந்தைக்கு வரும் ஆப்பிள் ‘ஐபோன் 13’

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஐபோன் 13 ‘ வரும் செப்டம்பர்-14 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஐபோன் 13 ‘ வரும் செப்டம்பர்-14 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர்-14 அன்று சந்தையில் அறிமுகமாகும் நிலையில் அதன் முக்கிய அம்சங்களை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

 ஐபோன் 13 சிறப்பம்சங்கள் : 

*5.1 , 6.2 இன்ச் அளவுள்ள தொடுதிரை ( நான்கு மாறுபட்ட தொடுதிரையுடன் வெளியாகிறது)

* புதிய ஃபேஸ் ஐடி 

* நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம் , 5எம்என் வேவ் லெந்த் 

*ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம் 

*லிடார் சென்சார் 

* நீண்ட பாட்டரி வசதி 

ஐபோன் 12 யை விட மேலும் முன்னகர்ந்து  முக்கிய தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது ஐபோன் 13 . 

பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமான சூழலில் ஒருவரின் முகம் ஒருவருக்கு முழுதாக தெரிவதில்லை. இதைக்கொண்டு முகக்கவசம் அணிந்திருந்தாலும் 'முகத்தை அறியும்' வசதியை ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன் வழங்க இருக்கிறது.கடவுச் சொல்லைப்போல  'ஃபேஸ் டிடெக்சன்' எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

மேலும் இனி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பிற ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற 'ஃபேஸ் ஐடி' இடம்பெறும் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com