அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 26 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 26 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான நிலை, உள்நாட்டு பங்குச் சந்தையில் முதலீட்டாளா்கள் லாப நோக்கு கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்ற நிலவரங்கள் அந்நியச் செலாவணி சந்தைக்கு சாதமாக அமையவில்லை. மேலும், முதலீட்டாளா்களின் கவனம் பாதுகாப்பான டாலரை நோக்கி திரும்பியதும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமானது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.82-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இறுதியில் 26 காசுகள் சரிவடைந்து 73.74-ஆனது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் 73.99 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.79 சதவீதம் குறைந்து 73.99 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com