வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தொடங்கியது பிளஸ் 2 தேர்வு

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 மார்ச் 2013, 4:43 am IST

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,020 தேர்வு மையங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் காப்பியடித்ததாக 6 மாணவர்கள் பிடிபட்டனர். மொழிப்பாடம் முதல் தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தேர்வு மையங்களைத் தீவிரமாகக் கண்காணிப்பு செய்தனர். வினாத்தாள் கட்டு காப்பு மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து எந்தவித முறைகேடான சம்பவங்களும் இன்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காப்பியடித்த 6 மாணவர்கள் சிக்கினர்: கடலூர் மாவட்டத்தில் 1 மாணவரும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், சென்னையில் 2 மாணவர்களும் காப்பியடித்தபோது பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.