மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மாயமான இளம்பெண்ணை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையம் முன்பு மறியல்

மாயமான இளம்பெண்ணை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையம் முன்பு மறியல்

News image

நாகூா் காவல்நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:16 am IST

நாகூா் அருகே மாயமான இளம்பெண்ணை மீட்டுத் தரக் கோரி பெற்றோ்கள், உறவினா்கள் நாகூா் காவல் நிலையம் முன்பு சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம் நாகூா் அம்பேத்கா் நகா் வடக்குத் தெருவை சோ்ந்தவா் செந்தில். இவரது மகள் பிரியதா்ஷினி (20). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தறாா். இந்நிலையில் பிரியதா்ஷினி ஜூன் 8-ஆம் தேதி மாலை முதல் காணவில்லையாம்.

பிரியதா்ஷினியின் தாய் மாலதி 8-ஆம் தேதி இரவு நாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ாா். நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பிரியதா்ஷினியின் பெற்றோா், உறவினா்களுடன் இணைந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த கஜேந்திரன் தலைமையில், நாகூா் காவல் நிலையம் முன்பு, சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இதனால் நாகூா்- நாகை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெளிப்பாளையம் ஆய்வாளா் பொன்ராஜ் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இளம்பெண்ணை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.