கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

செல்போன் கோபுரங்களுக்கு சூரியசக்தி

செல்போன் கோபுரங்களை இயக்க டீசல் ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக சூரியசக்தியை பயன்படுத்த என்று இந்திய தகவல் தொழில்நுட்ப மைய பேராசிரியர் எம்.டி.செல்வராஜ் கூறினார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 3:16 am IST

செல்போன் கோபுரங்களை இயக்க டீசல் ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக சூரியசக்தியை பயன்படுத்த என்று இந்திய தகவல் தொழில்நுட்ப மைய பேராசிரியர் எம்.டி.செல்வராஜ் கூறினார்.

சென்னையை அடுத்த தாழாம்பூரில் அமைந்துள்ள அக்னி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் மின்னியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதுடன், செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

செல்போன் கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த கதிர்வீச்சின் அளவும் அதிகரிக்கப்படுவதால் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள 30 கி.மீ சுற்றளவிற்கு மின்காந்த கதிர்வீச்சை வெளிப்படுத்தும் அதிக திறன் கொண்ட செல்போன் கோபுரங்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். செல்போன் கோபுரங்களை இயக்கப் பயன்படுத்தும் டீசல் ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக சூரியசக்தி பயன்படுத்தப்பட வேண்டும்.

ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளில் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் ஆகிய இடங்களில் செல்போன் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த கதிர்வீச்சைக் குறைக்க கிரீன் ரேடியோ தொழில்நுட்ப ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

கருத்தரங்க விழா மலரை மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப மைய பேராசிரியர் எஸ்.எஸ்.கார்த்திகேயன் வெளியிட்டார். கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், துறைத்தலைவர் பி.ஞானவேல்,உதவி பேராசிரியர் சந்திரவதனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.