
தமிழ்நாடு
இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

முதல்வர் விஜய் / தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருநது விலகுவதாக யுவராஜா அறிவித்துள்ளார்.
விஜய் கோரிக்கை நிராகரிப்பு
முதல்வர் ஜோசப் விஜய், அவரது மனைவியின் விவாகரத்து வழக்கில் இருவரும் காணொலி மூலம் ஆஜராக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலவச பேருந்து சேவை
கேரளத்தில் மகளிருக்கு இலவச பேருந்து சேவைத் திட்டத்தை அம் மாநில முதல்வர் வி.டி. சதீசன் திங்கள்கிழமை காலை தொடக்கி வைத்தார்.
உதயநிதி கண்டனம்
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இரண்டரை வயது குழந்தை பலியான விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை குறைந்துள்ளது.
அபிஷேக் பானர்ஜி அமலாக்கத் துறையில் ஆஜர்!
தொடக்கப்பள்ளி, வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, அமலாக்கத்துறை முன்பு ஜூன் 15 (இன்று) ஆஜரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி!
சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார்.
ஆனி மாதப் பலன்கள்
12 ராசிக்காரர்களுக்குமான ஆனி மாதப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களில் வடமாநிலத்தவர் தொடர்பு அதிகரிப்பு: அண்ணாமலை
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி!
கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் எப்போது நிறைவடையும்?
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, இடையே திமுக ஆட்சி மாறி, தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!
நாடு முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் விலையில் மாற்றம்! எவ்வளவு உயர்ந்தது?
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக ஐகியூ, விவோ நிறுவனங்களின் சில மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இருந்த, ஐகியூ 15, 15ஆர், நியோ 10 மற்றும் விவோ டி5 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள், பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஆடிஷன் விடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்த காவ்யா அறிவுமணி!
சினிமா நடிகை தேர்வுக்காக (ஆடிஷன்) எடுக்கப்பட்ட விடியோக்களை நடிகை காவ்யா அறிவுமணி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ஆடிஷனுக்காக எடுக்கப்பட்ட விடியோக்களை வீணாக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவ்யா பகிர்ந்துள்ளார்.
சின்ன திரையின் டாப் 5 சீரியல்கள்! முதலிடத்தில் மூன்று முடிச்சு தொடர்!
சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் ஆதரவு டிஆர்பி புள்ளிப் பட்டியல் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த வாரம் சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது.
நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு!
நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் விகிதம் 6.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 6.9 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் 6.4 ஆக குறைந்துள்ளது.
இதேபோன்று நகர்ப்புறத்தில் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போதும் இல்லாத வகையில், 8.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகர்ப்புறத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறேனா? எம்.ஆர். விஜயபாஸ்கர் பதில்!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திங்கள்கிழமை (ஜூன் 15) விளக்கம் அளித்துள்ளார்.
காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!
தமிழ்நாட்டில் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ஈ.எஸ். உமா, சென்னை தலைமையிட டிஐஜியாகவும், தலையிட துணை ஆணையர் கே.எஸ். பால கிருஷ்ணன், சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம்!
தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காக பல அடுக்குமாடி (High Rise Buildings) திட்ட அனுமதி (Planning Permission) வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (CMDA) வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ச்
இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டுத் தயாரிப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றில் இன்று (ஜூன் 15) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறேனா? எம்.ஆர். விஜயபாஸ்கர் பதில்!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திங்கள்கிழமை (ஜூன் 15) விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்லோவாக்கியாவில் உப்பு, பிரட் கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றது ஏன்?
ஸ்லோவாக்கியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி பிரட் (ரொட்டி) - உப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியா விடுதலை பெற்ற பிறகு முதல்முறை செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


























