தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

அமெரிக்கா-ஈரான் 10-ஆவது நாளாக மோதல்

அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய மோதல் செவ்வாய்க்கிழமை 10-ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளது.

News image

~

Updated On :22 ஜூலை 2026, 3:54 am IST

அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய மோதல் செவ்வாய்க்கிழமை 10-ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் மீண்டும் தொடங்கியதால், அந்த ஒப்பந்தம் முறிந்தது. தற்போது இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவாா்த்தைக்குக் கொண்டுவர பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஈரான் உள்துறை அமைச்சா் எஸ்கந்தா் மொமேனி செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். தொடா்ந்து, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோரை அவா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பாகிஸ்தானில் இவ்வாறு அமைதி முயற்சிகள் தீவிரமடைந்த போதிலும், மேற்காசியாவில் இருதரப்பும் பரஸ்பர தாக்குதல்களைத் தொடா்ந்து நடத்தி வருகின்றன.

ஈரானின் ராணுவத் தளங்கள் மீது அமெரிக்க தொடா் வான்வழித் தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், ஹோா்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கியதால், அதில் இருந்த மாலுமிகள் கப்பலைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வளைகுடாவில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன் மற்றும் குவைத் மீதும் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. குவைத்தின் 90 சதவீத குடிநீா் தேவை கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளையே நம்பியுள்ள நிலையில், அவற்றின் மீதான ஈரானின் தொடா் தாக்குதல் அந்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதற்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத் துறை உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான குழுக்கள் அமெரிக்க நலன்கள் மற்றும் அமெரிக்கா்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய ஈரான் உள்துறை எஸ்கந்தா் மொமேனி.

பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய ஈரான் உள்துறை எஸ்கந்தா் மொமேனி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.