தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம்!

சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டட அனுமதி வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து...

CMDA

சிஎம்டிஏ

Published On :

சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டட அனுமதி வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்குமாடி திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காக பல அடுக்குமாடி (High Rise Buildings) திட்ட அனுமதி (Planning Permission) வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (CMDA) வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுநாள் வரை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கான திட்ட அனுமதியானது, அபிவிருத்தி செய்பவர்களால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, அவ்விண்ணப்பத்தை கள ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வு செய்து பல அடுக்குமாடி கட்டடக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு பல அடுக்குமாடி கட்டட குழுவால் பரிசீலனை செய்து அக்குழுவின் பரிந்துரையின்படி அரசுக்கு சமர்பித்து அரசாணை பெற்ற பின் பலஅடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காகவும், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையினால் ஏற்படும் கால தாமத்தை தவிர்ப்பதற்காகவும்,

இனிவரும் காலங்களில் அபிவிருத்திதாரருக்கு ஏற்படும் கால தாமதம் குறைப்பதற்காகவும், குறைந்த நேரத்தில் ஒப்புதல்களை வழங்கவும், கட்டட விதிமுறைகள் மற்றும் கட்டட விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பல அடுக்குமாடி கட்டடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமே வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Summary

Apartment complex building plan approval: Authority granted to CMDA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.