தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நகரத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! பெண்கள் நிலை?

நகர்ப்புறத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4% ஆகக் குறைந்துள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.2% ஆக குறைந்துள்ளது குறித்து...

urban unemployment rate dips

நகரத்தில் பணிபுரியும் மக்கள் - ஏஎன்ஐ

Published On :

நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் விகிதம் 6.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 6.9 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் 6.4 ஆக குறைந்துள்ளது.

இதேபோன்று நகர்ப்புறத்தில் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போதும் இல்லாத வகையில், 8.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகர்ப்புறத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசின் புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் பெரிதாக எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 2025 மே முதல் நடப்பாண்டு மே வரை கிராமப்புறங்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாகவே உள்ளது.

ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடந்த ஆண்டு 54.8 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 54.4 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

இதேபோன்று நகர்ப்புறத்தில் (15 வயதுக்கு மேற்பட்டோருக்கான) வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு 6.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 6.9 சதவிகிதமாக இருந்தது.

2026 ஜனவரி - மார்ச் காலாண்டில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.6 சதவிகிதம் குறைந்துள்ளது. 2025-ல் இதே காலாண்டில் 6.7 சதவிகிதமாக இருந்தது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

India’s urban unemployment rate dips to 6.4 per cent in May

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.