திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஜவுளிக் கடைகளில் தீ விபத்து

சென்னை செளகார்பேட்டை பகுதியில் இருக்கும் இரு ஜவுளிக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 11:09 pm

சென்னை செளகார்பேட்டை பகுதியில் இருக்கும் இரு ஜவுளிக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்புப் படை வீரர்கள் கூறியது:

செளகார்பேட்டை மின்ட் தெருவில் இருக்கும் வர்தமான் வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2.45 மணிக்கு திடீரென தீ பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

யானைக்கவுனி தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களும், வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம் நிலையங்களில் இருந்து தலா ஒரு வண்டியும் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மேலும், தீயணைப்பு சிறப்பு ஊர்தி மற்றும் குடிநீர் வாரியத்தின் 4 லாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. கடுமையாக போராட்டத்துக்குப் பின் மாலை சுமார் 5.30 மணியளவில் தீ கட்டுக்குள் வந்தது.

இந்த வணிக வளாகம் தரைத்தளம் உள்பட 3 அடுக்குகளைக் கொண்டது. இதில் 5 ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. தரைத்தளத்தில் இருந்த கடையில்தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும். பின்னர் இரண்டாம் தளத்துக்கும் பரவியிருக்கும் என்று தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் முரளிதரன் மற்றும் பார்த்திபாய் ஆகியோரின் கடைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல லடசம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.