வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் (இஸ்ரோ) தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்திய பாமா பல்கலை கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 22-ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைகழகத்தின் 25-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதை பூமிக்கு அருகில் வரும்போதுதான் அதன் வட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிறுத்த முடியும். 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய்கிரகம் புவி வட்டப் பாதைக்கு நெருக்கமாக வரும். அதன் அடிப்படையில் வரும் அக்டோபர் மாத இறுதி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு இந்திய செயற்கைக்கோள் செலுத்தப்படும். இந்தச் செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய நாடுகள்தான் செயற்கைக்கோளை அனுப்பி அதன் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தி உள்ளன.
அந்த வரிசையில் இனி இந்தியாவும் இடம் பெறும். செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்திய 6-ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.
மேலும் நடப்பாண்டில் 12 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சத்திய பாமா பல்கலை கழகத்தில் உள்ள சிறிய ரக செயற்கைகோள் விரைவில் ஏவப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.
இந்த ஆண்டு 61 பேருக்கு டாக்டர் பட்டமும் மற்றும் 1281 பேருக்கு இளைநிலை பட்டமும், 1356 பேருக்கு முதுநிலை பட்டத்தையும் பல்கலைகழக வேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.
இந்த ஆண்டு 1013 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் சத்திய பாமா பல்கலை கழகத்தின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


