கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தொழிலதிபர் மார்ட்டின் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோûஸ ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 5:03 am IST

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோûஸ ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நாகராஜன் என்பவர் வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில் ரூ.7 கோடி கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் கடந்த மார்ச் மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.சுப்பையா, அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு அண்மையில் உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட குற்றப் பிரிவு போலீஸார் முன்னிலையில் அடுத்த 4 வாரங்களுக்கு தினமும் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்றும், போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.