நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று தமிழக ஆளுநர் ரோசய்யா கவலை தெரிவித்தார்.
"வாலியண்ட் வூரா எஜுகேஷனல் சிஸ்டம்ஸ்' என்ற தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் தொடங்கப்படும் டிஜிட்டல் தடயவியல் மையத்தின் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த மையத்தை ஆளுநர் ரோசய்யா தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் வழக்கமான குற்றங்களில் மட்டுமில்லாமல் எல்லா வகைக் குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். குறிப்பாக நிதி சார்ந்த குற்றங்களில் சைபர் குற்றவாளிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இதனால் நமது நிதித் துறை பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கிறது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்படுகிறது. இது தவிர பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் போன்றவை அதிகரிக்கவும் சைபர் குற்றங்கள் மிக முக்கிய காரணங்களான உள்ளன.
இது போன்ற சைபர் குற்றங்களால் பாதிப்பு ஏற்படும் இடம் ஓரிடத்திலும், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர் வேறொரு இடத்திலும் உள்ளனர். ஒரு நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்திலும் சைபர் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் 18 முதல் 30 வயதுக்குள்பட்ட இளைஞர்களாக உள்ளனர்.
தொழில்நுட்பரீதியான பல்வேறு காரணங்களால் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. அவ்வாறே குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாலும்கூட அவர்கள் மீதான குற்றங்களை நிரூபிப்பது என்பது விசாரணை அதிகாரிகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் பெரும் சவாலாக உள்ளன.
இந்நிலையில் சைபர் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களைத் தொகுப்பதிலும், அந்த ஆவணங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், அவர்கள் மீதான குற்றங்களை நிரூபணம் செய்வதிலும் டிஜிட்டல் முறையிலான தடயவியல் ஆய்வுகள் மிகவும் உதவிகரமாக உள்ளன.
அந்த வகையில் வாலியண்ட் வூரா எஜுகேஷனல் சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்படும் இந்த டிஜிட்டல் தடயவியல் மையம் ஏராளமான தடயவியல் நிபுணர்களை உருவாக்கி சைபர் குற்றங்களை ஒடுக்குவதில் பெரும் பணியாற்றும் என்பது நிச்சயம் என்றார் ஆளுநர் ரோசய்யா.
விழாவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் வாழ்த்திப் பேசினார். நிறுவனத்தின் தலைவர் கே. ராமசுப்பிரமணியம், மேலாண்மை இயக்குநர் வூரா ஆஞ்சநேயுலு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


