நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மனித வளம் ஆற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.
சென்னையை அடுத்த கெüரிவாக்கம் நியூபிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
மாணவர்களுக்கு அறிவுசார் கல்வி வழங்கி, அவர்களது அறிவாற்றலை மேம்படுத்தும் பணியை பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.
அதற்கு உறுதுணையாகத் திகழ்ந்து வரும் ஆசிரியர்களின் சேவை என்றென்றும் பாராட்டுக்குரியது.
மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றார்.
விழாவில் 176 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், கல்லூரி தலைவர் கே.லோகநாதன், செயலர் வி.எஸ்.மகாலட்சுமி, இயக்குநர் ஏ.சுவாமிநாதன், முதல்வர் வி.கனகசபை, ஆந்திர மகிளா காங்கிரஸ் தலைவர் ஏ.சுனிலா பிரதாப், பேராசிரியர் ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


