நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஆவின் மில்க்ஷேக், மசாலா மோர் அறிமுகம்

ஆவின் மில்க்ஷேக், மசாலா மோர் பாக்கெட், உப்பு கலந்த வெண்ணெய் ஆகிய புதிய பொருள்களை ஆவின் அறிமுகப்படுத்தி உள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2013, 4:19 am IST

ஆவின் மில்க்ஷேக், மசாலா மோர் பாக்கெட், உப்பு கலந்த வெண்ணெய் ஆகிய புதிய பொருள்களை ஆவின் அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய பொருள்களை அறிமுகப்படுத்தி அதற்கான விற்பனை பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் வி. மூர்த்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

ஆவின் மில்க்ஷேக்: இயற்கையான மூலப்பெருள்களுடன் பால் சேர்த்து வாழைப்பழ மில்க் ஷேக், ஆப்பிள் மில்க்ஷேக், வெண்ணிலா ஆரஞ்ச் மில்ஷேக், பைனாப்பிள் மில்ஷேக், கேரட் மில்க் ஷேக், வெண்ணிலா மால்ட் மில்ஷேக், சாக்லேட் மில்க் ஷேக் ஆகிய ஏழு சுவைகளில் ஆவின் மில்ஷேக் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பாதாம் சுவையில் புதிய ஆவின் மில்க்ஷேக்கை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 200 மி.லி. அளவு கொண்ட டெட்ரா பேக் விலை ரூ. 20. இது 120 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

ஆவின் அறிமுகப்படுத்தி உள்ள மசாலா மோர் 200 மி.லி. விலை ரூ.10. மசாலா மோர் 120 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

உப்பு கலந்த வெண்ணெய் 500 கிராம் பாக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 100 கிராம் பாக்கெட்டுகளில் ரூ. 30-க்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை பால்பொருள்களை அமைச்சர் மாதவரம் மூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன், இணை இயக்குநர் ராமன், பொது மேலாளர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 100 புதிய ஆவின் பாலகங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

புதிய ஆவின் பொருள்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.