சென்னை வியாசார்பாடியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.
இது குறித்த விவரம்:
சென்னை வியாசார்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுபவர் பாஸ்கரன் (56). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் பிரபாகரனுடன் திங்கள்கிழமை இரவு பைக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வியாசார்பாடி பகுதியில் 3 பேர் குடிபோதையில் சாலையில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாஸ்கரன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த பூபாலன் என்பவர் பாஸ்கரனிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து பாஸ்கரன் மற்றும் பிரபாகரனை குடிபோதையில் இருந்த 3 பேர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பாஸ்கரன் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய மூவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

