மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

டீக்கடைக்காரர் வீட்டில் 30 சவரன் நகை திருட்டு

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் டீக்கடைக்காரர் வீட்டில் 30 சவரன் நகை திருடு போனது.

Updated On :11 ஜூன் 2013, 9:13 pm

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் டீக்கடைக்காரர் வீட்டில் 30 சவரன் நகை திருடு போனது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். அவர் சிகிச்சைக்காக திங்கள்கிழமை காலை புதுச்சேரி சென்றாராம்.

பின்னர் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்த மாரியப்பன், வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாராம். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 சவரன் நகையை காணவில்லை என்பது தெரியவந்ததாம்.

இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காரில் ரூ. 10 லட்சம் கொள்ளை: அசோக் நகரில் நின்றிருந்த கார் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரகாஷ் (60). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர், அசோக் நகரில் உள்ள ஆந்திரா வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை செவ்வாய்க்கிழமை காலை எடுத்துக்கொண்டு காரில் சென்றாராம்.

வீட்டுக்கு செல்லும் வழியில் அசோக் நகர் 53-ஆவது தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பாடு பார்சல் வாங்க சென்றாராம். அப்போது பணத்தை காரில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, ரூ. 10 லட்சம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.