மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தனியார் மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :11 ஜூன் 2013, 8:52 pm

மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸôர் தரப்பில் கூறப்பட்டதாவது: மந்தைவெளி சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால் (60). பூ வியாபாரியான அவர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவில் அவருக்கு காசநோய் இருப்பதாக மருத்துவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனராம்.

இதனைக் கேட்டதில் இருந்து வேணுகோபால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையின் 3-ஆவது மாடிக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் சென்ற வேணுகோபால், அங்கிருந்து கீழே குதித்து விட்டாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரித்து வருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.