வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாமல்லபுரத்தில் கடல்சார் அருங்காட்சியகம்

மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டப் பணிகள் வேகமாக தொடங்கப்பட வேண்டும் என அதிகாரிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On :22 ஜூன் 2013, 3:37 am IST

மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டப் பணிகள் வேகமாக தொடங்கப்பட வேண்டும் என அதிகாரிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை வேகமாக மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, மாமல்லபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள நீர்மூழ்கி கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டப் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும்.

இதில், மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் "வாக்லி' நீர்மூழ்கிக் கப்பலை வரும் அக்டோபர் மாதத்துக்குள் மாமல்லபுரம் கடற்கரை மணல் பரப்பில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் தஞ்சையில் நாட்டிய விழா உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்துள்ள பிற திட்டங்களையும் வேகமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் ஆ. அருண்மொழித்தேவன், கலை பண்பாடு மற்றும் அறநிலையத் துறை செயலர் ஆர். கண்ணன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் ஹேமந்த் குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.