செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வக்ஃபு வாரியத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக தமிழ்மகன் உசேன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Updated On :11 ஜூலை 2013, 8:16 pm

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக தமிழ்மகன் உசேன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற வக்ஃபு வாரியத் தேர்தலில் அவர் தேர்வு செய்யப்பட்டார். தாற்காலிகத் தலைவர் சலாவுதின் முகமது அயுப் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. அதில் வக்ஃபு வாரிய உறுப்பினர்களும், எம்.பி.க்களுமான ஜெ.எம்.அரூண், அப்துல் ரகுமான், எம்.எல்.ஏ.க்கள் முகமது ஜான், அஸ்லாம் பாட்சா உள்ளிட்டோர் தேர்தலில் பங்கேற்று வாரியத் தலைவரை தேர்வு செய்தனர்.

அதில், தமிழ்மகன் உசேன் மீண்டும் வக்ஃபு வாரியத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தகவலை வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் அப்துல் ரபிக் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.