தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

குறைந்த கொழுப்புச் சத்து ஆவின் பால் அறிமுகம்

மிகக் குறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த "ஸ்லிம் அண்டு ஃபிட்' என்ற ஆவின் பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 3:02 am IST

மிகக் குறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த "ஸ்லிம் அண்டு ஃபிட்' என்ற ஆவின் பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலை சென்னை நந்தனம் ஆவின் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பால்வளத்துறை அமைச்சர் வி. மூர்த்தி அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய பால் 0.5 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைந்த அளவில் கொழும்புச் சத்து கொண்டதாக இருக்கும். 200 மி.லி. டெட்ரா பாக்கெட் விலை ரூ. 15.

விழாவில் பேசிய அமைச்சர், சென்னையில் 100 பாலகங்கள் விரைவில் திறக்கப்படும். ஆவின் பால்பொருள்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 8.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது; நுகர்வோருக்கு பால் அட்டைகள் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

விழாவில் ஆவின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.ஏ.ராமன், பொதுமேலாளர் பி. குமாரவேல்பாண்டியன், பொது மேலாளர் எஸ்.கே. கதிர்வேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.