சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு புதிய சி.டி. ஸ்கேன் கருவி வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள இந்த கருவி இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசு மருத்துவமனை சிகிச்சைப் பிரிவில் நிறுவப்படவுள்ளது.
முற்றிய நிலையில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளையும், அறுவை சிகிச்சை செய்யமுடியாத சிக்கலான பகுதிகளிலும் சிகிச்சை அளிக்க இந்தக் கருவி பயன்படும். ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்துகொண்டே, பாதிப்பு உள்ள இடங்களில் கதிர்வீச்சை செ லுத்தி சிகிச்சை அளிக்கவும் முடியும்.
கதிர்வீச்சை செலுத்தி சிகிச்சை செய்யும்போது அந்த கதிர்வீச்சு செல்லும் பாதைகளில் உள்ள நல்ல செல்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்தக் கருவியின் மூலம் பாதிப்புள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவற்றை அழிக்க முடியும்.
இது குறித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கனகசபை கூறுகையில்,""ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இந்தக் கருவியை நிறுவுவதன் மூலம் பாதிப்புள்ள இடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்திட வேண்டும்: தங்கம் தென்னரசு

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


