கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புகையிலை, போதை தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் உளவியல் துறையின் 50 ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த பிரிவு செயல்படும். புகை, போதை பழக்கவழக்கங்களில் சிக்கி அதிலிருந்து மீள விரும்புவோர் இங்கு சிகிச்சைக்குச் செல்லலாம். சிகிச்சைக்கு செல்லும் வெளி நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சைகள் போன்றவை வழங்கப்படும்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.ராமகிருஷ்ணன் கூறியது: புகை, போதை பழக்கவழக்கங்களால் புற்றுநோய் அல்லாத நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படும். புகை, போதை பொருள்களில் உள்ள நிகோடின் வேதிப்பொருள்தான் உடலில் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது. எனவே நிகோடின் உபயோகத்தை குறைக்கக் கூறி நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாதுகாப்பு, வா்த்தக உறவை வலுப்படுத்த உறுதி: பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்
உணவு பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள்: 8 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

15.6.1976: இந்தியா - பாக். விமான தொடர்பு: பேச்சு ஆரம்பம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


