வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரெüடி வெங்கடேசன் கொல்லப்பட்டது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வண்ணாரப்பேட்டை, வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். வெங்கடேசன் மீது கொலை வழக்குகளும், அடிதடி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை தனது மகன் மற்றும் மகளை டியூசன் சென்டரில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட சில ஆயுதங்களால் வெங்கடேசனை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்துக்குரிய 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


