டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகா்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவா் தனிநபா் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.

News image
Updated On :15 ஜூன் 2026, 4:49 am IST

துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகா்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவா் தனிநபா் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.

இரண்டின் இறுதிச்சுற்றிலுமே, பலம் வாய்ந்த அணியாகவும், இந்தியாவின் சவால் மிக்க நீண்டகால போட்டியாளராகவும் இருக்கும் தென் கொரியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்தியா் தீரஜ் பொம்மதேவரா இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்று அசத்தியிருக்கிறாா்.

முன்னதாக, போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரீகா்வ் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, கும்கும் மோஹோத் கூட்டணி 5-1 என்ற கணக்கில், முதலிடத்திலிருந்த தென் கொரியாவின் கிம் ஜெ டியோக், ஓஹ் யெ ஜின் ஜோடியை வீழ்த்தியது.

இதில் கும்கும் மோஹோத்துக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த தீரஜ் பொம்மதேவரா 7-3 என்ற புள்ளிகள் கணக்கில், 4-ஆம் இடத்திலிருந்த தென் கொரியாவின் லீ வூ சோக்கை வீழ்த்தினாா்.

தீரஜுக்கு, உலகக் கோப்பை போட்டியில் தனிநபா் பிரிவில் இது முதல் தங்கமாகும். அவரிடம் தோற்ற லீ, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவராவாா்.

ஒரே உலகக் கோப்பை போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா 2 தங்கப் பதக்கங்கள் வென்றது இதுவே முதல்முறையாகும். போட்டியில் இந்தியா 2 தங்கத்துடன் 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. சீனா முதலிடமும், மெக்ஸிகோ 3-ஆம் இடமும் பிடித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.