மதுராந்தகம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே சின்னகொளப்பாக்கத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இக்கல்லூரியின் முதல்வர் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த ரங்கராஜுலு (60), கல்லூரி நிர்வாக அலுவலர் நாராயணன் மனைவி மீனா (37) ஆகியோர் சென்னையில் இருந்து கல்லூரிக்கு புதன்கிழமை காரில் சென்றுள்ளனர். காரை சாந்தகுமார் (30) ஓட்டி வந்துள்ளார்.
சென்னையில் இருந்து வந்த கார் கல்லூரிக்குச் செல்ல சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக திரும்பியுள்ளது. அப்போது திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி, காரில் மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு சென்னை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு தனியார் கல்லூரி முதல்வர் ரங்கராஜுலு, டிரைவர் சாந்தகுமார் ஆகியோர் இறந்தனர். மீனா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து படாளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் தேடப்படும் குற்றவாளி கைது: மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது பிடிபட்டாா்!

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
ஷக்கா்பூா் மேம்பாலம் அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஒருவா் மீட்பு

தஞ்சையில் சேகுவேராவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


