ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் புதன்கிழமை முதல் மூன்று நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம், தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம், தேசிய தொலைத்தொடர்பு பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட ஆறு தொழிற்சங்கங்கள் தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி புதன்கிழமை முதல் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் புதன்கிழமை புரசைவாக்கத்தில் உள்ள சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து பி.எஸ்.என்.எல்., சங்கத்தினர் கூறியது: பி.எஸ்.என்.எல்., ஊழியர்களில் டெலிகாம் மெக்கானிக், அலுவலக உதவியாளர் ஆகியோரிடம் ஊதிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்கெனவே ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ், மருத்துவப்படி, சுற்றுலா படி போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திரும்ப வழங்க வேண்டும். பணியின்போது இறக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். நாடு முழுவதும் நடைபெறும் தர்னா போராட்டத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்று உள்ளதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் தேடப்படும் குற்றவாளி கைது: மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது பிடிபட்டாா்!

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
ஷக்கா்பூா் மேம்பாலம் அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஒருவா் மீட்பு

தஞ்சையில் சேகுவேராவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


