சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: மயிலாப்பூர் விசாலாட்சித் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வைரவசுந்தரம் (45). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நீலாங்கரை கடற்கரைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.
அவர்கள் நீலாங்கரை தாண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும்போது, அங்கு வந்த ஒரு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வைரவசுந்தரம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வேன் டிரைவர் மாம்பாக்கம் வேங்கைவாசலைச் சேர்ந்த ஷேக் முகம்மது அலியை (25) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?

தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

