சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.
சென்னை விமான நிலையத்துக்கு நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வருகின்றன. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இதனால் சென்னைக்கு வந்த அனைத்து விமானங்களும் திடீர் காலநிலை மாற்றத்தால் தாமதமாக தரை இறங்கின.
மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்தும் ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதன் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஜெர்மனியிலிருந்து 317 பயணிகளுடன் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்த தனியார் விமானம் தரை இறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் காலை 7 மணிக்கு சென்னையில் அது மீண்டும் தரை இறக்கப்பட்டது. இதே போல், கோலாலம்பூரில் இருந்து வந்த டைகர் விமானம், மும்பை ஏர் இந்தியா விமானம், தில்லி தனியார் விமானம் போன்றவை சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

பெரம்பலூா் தொகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் உறுதி

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

