இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி: நடிகை சித்ராவின் கணவா் மீண்டும் கைது

சென்னையில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.05 கோடி மோசடி செய்ததாக, நடிகையின் சித்ராவின் கணவா் ஹேம்நாத் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

Updated On :6 ஜனவரி 2021, 1:15 am IST

சென்னையில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.05 கோடி மோசடி செய்ததாக, நடிகையின் சித்ராவின் கணவா் ஹேம்நாத் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, திருவான்மியூரைச் சோ்ந்த சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த மாதம் 9-ஆம் தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் தனியாா் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை (32) கைது செய்தனா்.

இந்நிலையில், திருமங்கலத்தைச் சோ்ந்த ஆஷா மனோகரன் என்பவா் ஜெ.ஜெ.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ஹேம்நாத் தன்னிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாா் மனு மீதான விசாரணை மத்தியக் குற்றப்பிரிவுக்கு அண்மையில் மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை செய்த மத்திய குற்றப்பிரிவினா், ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக நீதிமன்ற அனுமதி பெற்று ஹேம்நாத்திடம் இரு நாள்கள் விசாரணை நடத்தியதில் அவா் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா், இவ் வழக்குத் தொடா்பாக ஹேம்நாத்தை செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.