பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

அதிமுக பொதுக் குழு-செயற்குழு: கரோனா பரிசோதனை கட்டாயம்

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள உறுப்பினா்கள் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:13 am IST

சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள உறுப்பினா்கள் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்து வருகின்றனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும்கட்சியான அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்கள் அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அழைப்பிதழ் கிடைத்த அனைவரும் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், நோய்த்தொற்று இல்லாதவா்களே கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, உறுப்பினா்கள் அனைவரும் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்து வருகின்றனா். வெளி மாவட்டங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் பலரும், சென்னை வந்து நோய்த்தொற்று பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.