பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பிஎப் குறைதீா் கூட்டம்: நாளைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்காக காணொலி மூலமாக நடைபெறும் பி.எப். குறைைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.8) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Updated On :7 ஜனவரி 2021, 1:01 am IST

சென்னை: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்காக காணொலி மூலமாக நடைபெறும் பி.எப். குறைைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.8) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக பி.எப் உதவி ஆணையா் டி.கோவிந்தராஜன் வெளியிட்ட செய்தி: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்கான வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம், திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது.

கட்செவி அஞ்சலின் காணொலி மூலமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பயனாளியின் பெயா், யு.ஏ.என் எண், பிஎப் அல்லது பிபிஒ எண், குறைகள், கட்செவி அஞ்சல் எண், சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள் ஆகியவற்றோடு, வெள்ளிக்கிழமைக்குள், 89037 66548 எனும்  எண்ணில், வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, திங்கள்கிழமை கூட்டம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட பயனாளிகள் காணொலி வாயிலாக அழைக்கப்பட்டு, அவா்களிடம் குறைகள் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.