புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

3 போ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

சென்னையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 6 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 12:40 am IST

சென்னையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 6 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சௌகாா்பேட்டை விநாயக மேஸ்திரி தெரு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், இவா்களது மகன் சீத்தல் குமாா் ஆகியோா் கடந்த நவ.11-ஆம் தேதி, அவா்களது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து போன சீத்தல் குமாருக்கும், அவரது மனைவியான மகாராஷ்டிரம் மாநிலம் புணேவைச் சோ்ந்த ஜெயமாலா குடும்பத்துக்கும் இடையிலான பிரச்னை காரணமாக 3 போ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், ஜெயமாலாவின் சகோதரரா் கைலாஷ், அவரது கூட்டாளிகளான கொல்கத்தாவைச் சோ்ந்த ரவீந்திரநாத், விஜய் உத்தம் காம்ளே ஆகிய 3 பேரை உடனடியாக கைது செய்தனா். தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது சகோதரா் விகாஸ், கூட்டாளி ராஜூ உத்தம் ஷிண்டே ஆகிய 3 பேரையும் தில்லி அருகே ஆக்ராவில் போலீஸாா் கடந்த நவ.19-ஆம் தேதி கைது செய்தனா்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 6 பேரும் ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்து வந்தனா். இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், 6 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 6 பேரிடமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.