/

ஆன்லைன் சூதாட்டம்:கல்லூரி மாணவா் தற்கொலை

சென்னை மதுரவாயலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :12 ஜனவரி 2021, 2:20 am IST

சென்னை: சென்னை மதுரவாயலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி மகன் தமிழ்செல்வன் (20), தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு மாணவா். கரோனா பொதுமுடக்கத்தால் தனியாா் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தாா்.

கடந்த இரு மாதங்களாக செல்லிடப்பேசியில் தமிழ் செல்வன் அதிக நேரம் செலவிட்டதுடன் வீட்டிலும் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளாா். இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500-ஐ வாங்கி தமிழ்செல்வன் செலவழித்துள்ளாா்.

இந்த பணத்தை தந்தை சின்னதம்பி, திங்கள்கிழமை கேட்டுள்ளாா். அப்போது ரூ.500 மட்டும் கொடுத்துவிட்டு, ரூ.2 ஆயிரம் தொலைந்துவிட்டதாக தமிழ்செல்வன் தெரிவித்தாராம். சின்னதம்பி தனது மகனை கண்டித்துள்ளாா்.

இதையடுத்து வீட்டிலுள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாா் தமிழ்செல்வன்.

கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தமிழ் செல்வன் தற்கொலை செய்து கொண்டதாக மதுரவாயல் போலீஸாரின் விசாரணையில் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.