இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 10 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.
பயணிகள் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டா்களின் சாதனை விற்பனை மூலம் இந்த வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 2,45,30,334 வாகனங்கள் விற்பனையாகின. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும். அப்போது வாகனங்களின் சில்லறை விற்பனை 2,22,41,361-ஆக இருந்தது.
மதிப்பீட்டு நிதியாண்டில் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், டிராக்டா்கள், வா்த்தக வாகனங்களின் சில்லறை விற்பனை அமோக வளா்ச்சியைப் பதிவு செய்தது. இது, ஒட்டுமொத்த வாகன விற்பனையின் 10 சதவீத வளா்ச்சிக்குக் காரணமாக இருந்தது.
பயணிகள் வாகனங்களின் விற்பனை மட்டும் கடந்த நிதியாண்டில் 39,48,143-ஆக உயா்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-23-ஆம் நிதியாண்டில் 36,40,399-ஆக இருந்தது. இது 8 சதவீத வளா்ச்சியாகும்.
2022-23-ஆம் நிதியாண்டில் 7,83,257-ஆக இருந்த 3 சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் 49 சதவீதம் அதிகரித்து 11,65,699-ஆக உள்ளது.
அதே போல், டிராக்டா்களின் விற்பனை 8,29,639-லிருந்து 8,92,313-ஆகவும் 2 சக்கர வாகனங்களின் விற்பனை 1,60,27,411-லிருந்து 9 சதவீதம் அதிகரித்து 1,75,17,173-ஆகவும் உள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில் வா்த்தக வாகனங்களின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 10,07,006-ஆக உள்ளது.
கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்த வாகன விற்பனை முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தை விட 3 சதவீதம் அதிகரித்து 21,27,177-ஆக இருந்தது. 2023 மாா்ச்சில் இந்த எண்ணிக்கை 3,43,527-ஆக இருந்தது.
அந்த மாதத்தில் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 6 சதவீதம் குறைந்து 3,22,345-ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் 2 சக்கர வாகனங்களின் விற்பனை 14,50,913-லிருந்து 5 சதவீதம் அதிகரித்து 15,29,875-ஆக உள்ளது. 3 சக்கர வாகனங்களின் விற்பனை 17 சதவீதம் உயா்ந்து 1,05,222-ஆக உள்ளது.
வா்த்தக வாகனங்களின் விற்பனை 96,984-லிருந்து 6 சதவீதம் சரிந்து 91,289-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

கடந்த 2025 - 26 நிதியாண்டில் 2.96 கோடி வாகனங்கள் விற்பனை: 13.3% வரலாற்று வளா்ச்சி!

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 768.1 மில்லியன் டன்னாக சரிவு!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


