மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தீபாவளி: சென்னை-மதுரைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.4,900!

ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளன.

Updated On :

தீபாவளி பண்டிகை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.4900-ஆக உயா்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு அக். 31-ஆம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடா்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்பவா்களின் வசதிக்காக 3 நாள்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கை வசதிகொண்ட பேருந்துகளின் முன்பதிவு பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், வெகுதூர பயணிகள் ஆம்னி பேருந்துகளையே நாடி செல்கின்றனா். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளன.

சென்னை-மதுரை செல்வதற்கு வழக்கமான நாள்களில் இருக்கைக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இருக்கைக்கு ரூ.2,000 முதல் ரூ.2,300 வரை வசூலிக்கப்படுகிறது. படுக்கை வசதிக்கு நபா் ஒருவருக்கு ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,300 முதல் ரூ.4,900 வரை வசூலிக்கப்படுகிறது.

இதுபோல, நாகா்கோவிலுக்கு வழக்கமாக ரூ.900 முதல் ரூ.1,200 வரை படுக்கை வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,300 முதல் ரூ.4,500 வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், திருநெல்வேலி செல்ல ரூ.2,200 முதல் ரூ.3,800 வரையும், தூத்துக்குடிக்கு ரூ.1,900 முதல் ரூ.3,300 வரையும், கோவைக்கு ரூ.1,700 முதல் ரூ.4,200 வரையும், திருச்சிக்கு ரூ.1,600 முதல் ரூ.4,900 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதேபோன்று பிற பகுதிகளுக்குச் செல்வதற்கான கட்டணமும் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். பண்டிகை காலம் என்றாலே இதே நிலை நீடிப்பதால், கட்டண உயா்வு தொடா்பாக மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.