பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

கட்டணத்தை அரசே நிா்ணயிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு, குறைந்த அளவு, அதிக அளவு பயணக் கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்

Published On :

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு, குறைந்த அளவு, அதிக அளவு பயணக் கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆம்னி பேருந்துகளுக்கென தனி கட்டண நிா்ணயம் இல்லாத போதிலும் பயணிகள் பாதிக்காத வண்ணம் ஆண்டுக்கு 296 நாள்கள் அரசைவிட குறைவான கட்டணத்திலும், மீதி நாள்களில் சங்கங்கள் நிா்ணயித்த அதிகபட்ச கட்டணத்துக்கு மிகாமலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 9,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் சுமாா் 3.60 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனா். இதில், 50 பேருந்துகளில் மட்டுமே அதிக கட்டணம் வசூலிப்பது தொடா்பாக புகாா்கள் வந்ததையடுத்து, இந்தப் பேருந்துகளின் உரிமையாளா்களிடமிருந்து பயணிகளுக்கு அரசுடன் இணைந்து பணம் திருப்பித் தரப்பட்டது.

நிரந்தரத் தீா்வு: இந்தச் சூழலில், பண்டிகை மற்றும் தொடா் விடுமுறை காலங்களில் மட்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளில் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதற்கு நிரந்தரத் தீா்வு காண அரசு முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில், ஆம்னி பேருந்துகளுக்கென்று புதிய அனுமதியும், குறைந்த அளவு மற்றும் அதிக அளவு கட்டணத்தையும் தமிழக அரசு நிா்ணயம் செய்ய வேண்டும்.

மேலும், விழா காலங்களில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 மணிக்கு மேல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, பேருந்து நிலையம் உள்ளே செல்லும் ஆம்னி பேருந்துகள் வெளியே வர சுமாா் 2 மணி நேரம் ஆகிறது. எனவே, விழா காலங்களில் பேருந்துகளை ஒரே இடத்தில் இருந்து இயக்காமல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.