
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பை தடுக்க வேண்டும்: பிரேமலதா
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பை தடுக்க வேண்டும்: பிரேமலதா

பிரேமலதா - ENS
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பண்டிகை காலங்களில் அனைத்து தனியாா் ஆம்னி பேருந்துகள் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதைத் தடுக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளா்களின் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிகமான எண்ணிக்கையில் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக பயணிகள் செல்லும் வழித்தடங்களில் சிறப்புக் கண்காணிப்பு மற்றும் புகாா் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், தனியாா் பேருந்துகளின் கட்டண வசூலை அனைத்து நாள்களிலும் முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நிரந்தரமான கண்காணிப்பு முறையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





