பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் சூட்கேஸில் உள்ள பெரும்தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாகப் புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள்.
இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது. ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், சோம், கேப்ரியலா, ரியோ என ஆறு பேர் கடைசி வாரப் போட்டியாளர்களாக உள்ளார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் பாதியில் ஒருவர் வெளியேறுகிற நிலைமை ஏற்படும். சூட்கேஸில் ரூ. 5 லட்சம் பிக் பாஸ் இல்லத்துக்குள் அனுப்பப்படும். தன்னால் வெற்றியாளர் ஆக முடியாது என்று எண்ணுகிற போட்டியாளர், சூட்கேஸில் உள்ள ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்.
இந்தமுறை கேப்ரியலா, ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு தகவலில் ரம்யா பாண்டியன் வெளியேற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. நடிகர் ஆரிக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளதாக இல்லத்துக்குள் மீண்டும் நுழைந்துள்ள போட்டியாளர்கள் கூறியுள்ளார்கள். இதனால் முயற்சியைக் கைவிட்டு, சூட்கேஸ் பணத்துடன் வெளியேற முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், விஜய் தொலைக்காட்சி இன்று ஒளிபரப்பிய விளம்பரத்தில் சூட்கேஸின் பக்கத்தில் நடிகர் ஆரி நின்றுகொண்டிருக்கிறார். இதனால் எந்தப் போட்டியாளர் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை நண்பர்களின் முன்னேற்றத்துக்காக வெளியேறுவதாகக் கூறி, நடிகர் கவின், சூட்கேஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 21 - நேரலை!

அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து 3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவு!

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




