அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சிம்புவின் மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மோஷன்  போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 8:11 pm IST

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மோஷன்  போஸ்டர் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன்.

இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

திரைப்படப் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதித்த பிறகு, ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்ட சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.

புதுச்சேரியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக இன்று வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.