ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஆறாவது வனம்

எம்.பி.ஜி. பிலிம்ஸ் பட நிறுவனம் "ஆறாவது வனம்' என்ற புதிய படத்தைத் தயாரித்து வருகிறது. இதில் பிரபல கன்னட நடிகர் பூஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த வித்யா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:58 pm IST

எம்.பி.ஜி. பிலிம்ஸ் பட நிறுவனம் "ஆறாவது வனம்' என்ற புதிய படத்தைத் தயாரித்து வருகிறது. இதில் பிரபல கன்னட நடிகர் பூஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த வித்யா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய புவனேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் "ஆறாவது வனம்' பற்றி கேட்டபோது...

''ஓர் இளம் ஜோடியின் காதலுக்காக ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் ஊரை காலிசெய்கிறார்கள்... இரண்டு பேரைத் தவிர. இப்போதும் அந்த கிராமம் அப்படியே இருக்கிறது. இன்று வரை அந்த இருவர் மட்டுமே அந்த ஊரில் வசிக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவம்தான் "ஆறாவது வனம்'.

படத்தின் முக்கியக் காட்சிகளை கோவை அருகேயுள்ள சிங்கராம்பாளையம் கிராமத்தில் படமாக்கினோம்.

கதைக்கு உயிரூட்ட, ஊர் மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அவர்களை 5 நாள்கள் ஊருக்கு வெளியே தங்க வைத்து காட்சிகளைப் படமாக்கினோம். அந்த 5 நாள்களும் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தயாரிப்பாளர் தியாகராஜன் செய்துகொடுத்தார். அதனால் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்க்கும் ரசிகர்கள், தாங்கள் பார்த்த நல்ல படங்களின் வரிசையில் இந்தப் படத்தையும் சேர்ப்பார்கள்'' என்றார்.

இசை - ஹரிபாபு. படத்தொகுப்பு - ஜியான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.