/

தனுஷுக்கு ஜோடியாகிறார் பாலிவுட் நடிகை அலியா பட்

கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ பாலிவுட் படத்தின் நாயகிதான் இந்த அலியா பட்

News image
Updated On :21 ஜூன் 2013, 2:24 pm IST

‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ படத்தின் நாயகி அலியா பட் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மாற்றான் திரைப்படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் புதிய படம் இயக்குவதற்கு தயாராகிவிட்டார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் தனுஷ்தான் நாயகனாக நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். தனுஷ் இப்போது நையாண்டி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதன் பிறகே கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க இருக்கிறாராம்.

கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ பாலிவுட் படத்தின் நாயகிதான் இந்த அலியா பட். தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவர், தற்போது தமிழர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.