தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

ஜப்பானுக்கு செல்கிறது வேட்டை மன்னன்

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஜப்பான் நாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயாரிப்பாளரும், இயக்குனரும் லோகேசன் பார்ப்பதற்காக ஜப்பான் சென்றுள்ளனர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:39 pm IST

சிம்பு கைவசம் தற்போது வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு படங்களிலும் சிம்புவுக்கு ஜோடி அவருடைய காதலி ஹன்சிகாதான்.

அதோடு இரு படங்களையும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார். நீண்ட நாட்களாக இவ்விரு படங்களும் தயாரிப்பில் இருந்து வந்தநிலையில் சமீபத்தில் வாலு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எனவே, இதே வேகத்தில் வேட்டை மன்னன் படப்பிடிப்பையும் விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.

வேட்டை மன்னன் படத்தில் இதுவரை 50 சதவீத் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஜப்பான் நாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயாரிப்பாளரும், இயக்குனரும் லோகேசன் பார்ப்பதற்காக ஜப்பான் சென்றுள்ளனர். அங்கு தொடர்ச்சியாக ஒரே ஷெட்டியூலில் படமாக்கிட முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் ஜெய், சிம்புவின் நண்பராக நடித்துள்ளார். சிம்பு, ஜெய் இருவரும் வட சென்னையில் ரௌடிகளாக வலம் வருகிறார்கள். இவர்களுடன், ஹன்சிகா மோத்வானி,தீக்ஷா சேத்,பூனம் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கு சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.