‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் அனேகன்.
இதில் நாயகனாக தனுஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த அமிரா அறிமுகமாகிறார். ‘ராவணன்’ படத்திற்குப் பிறகு கார்த்திக் ஒரு இடைவெளி விட்டு இந்த படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
காதலும், நகைச்சுவையும், சண்டைக்காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதையில், தனுஷ் இதுவரை நடிக்காத தோற்றங்களில் தோன்றி கலக்கவிருக்கிறார். வியட்நாம், கம்போடியா, மலேசியா, பொலிவியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. “நமச்சிவாய வாழ்க..” என்று துவங்கும் திருவாசகப் பாடலில் கடைசி வரியில்.. “ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க..” என்று சொல்கிறார் மாணிக்கவாசகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









