நடிகர் பரத் தனது காதலியை மணமுடித்தார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பரத்.
அதனைத்தொடர்ந்து வெயில், நேபாளி, எம்.மகன், யுவன் யுவதி உள்பட 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பரத் நடிப்பில் வெளியான 555 நல்ல வரவேற்பை பெற்றது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.
இந்நிலையில் பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி தம்பதியின் மகளான டாக்டர் ஜெஸ்லி என்பவருக்கும் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 14ம் தேதி சென்னை MRC நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு புதுமண தம்பதியை வாழ்த்த இருக்கின்றனர். பரத் - ஜெஸ்ஸி இருவரும் காதலித்து வந்தநிலையில் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் மணமுடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









