சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நடிகர் குள்ளமணி காலமானார்

நடிகர் குள்ளமணி (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை (டிச.25) காலமானார்.

News image
Updated On :25 டிசம்பர் 2013, 5:56 pm

தினமணி

நடிகர் குள்ளமணி (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை (டிச.25) காலமானார்.

2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குள்ளமணி புதன்கிழமை உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மரமடக்கி கிராமத்தைச் சேர்ந்த குள்ளமணி சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். சென்னையில் எம்.என்.நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பிரபலங்களுடன் சிறு வேடங்களில் நடித்தார்.

"நவாப் நாற்காலி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான குள்ளமணி ஏராளமான படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

"ரங்கா', "பில்லா' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த இவர், "கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற "பேரிச்சம்பழம் காமெடி' வசனத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டார்.

மறைந்த குள்ளமணிக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு அவருடைய சொந்த ஊரில் வியாழக்கிழமை (டிச.26) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.